பிரியா விடைபெற்ற ரோஜர் ஃபெடரர்! தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத ரபேல் நடால்
கண்ணீர் மல்க சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து விடைபெற்ற ரோஜர் ஃபெடரர்.
பெடரர் விலகுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் அழுத ரபேல் நடால்.
சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் கண்ணீர் மல்க விடைபெற்ற நிலையில் அவர் அருகில் உட்கார்ந்திருந்த மற்றொரு ஜாம்பவான் ரபேல் நடாலும் அழுதது காண்போரை கலங்கடித்துள்ளது.
20 கிராம் ஸ்லாம் பட்டங்களை முதன்முறையாக வென்ற வீரர், விம்பிள்டன் பட்டத்தை அதிக முறை வென்ற வீரர் போன்ற சாதனையை ரோஜர் ஃபெடரர் படைத்திருக்கிறார்.
இந்த நிலையில் 41 வயதான அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு லேவர்ஸ் கோப்பை தொடர் தான் தமது கடைசி போட்டி என்று அறிவித்தார். இந்த நிலையில் தனது கடைசி ஆட்டத்தில் தனது நண்பரும் கடும் போட்டியாளருமான ரபேல் நடால் உடன் ரோஜர் பெடரர் இணைந்து இரட்டையர் பிரிவில் விளையாடினார். இதில் இந்த ஜோடி தோற்றது, இதனை அடுத்து ரசிகர்களிடமிருந்து கண்ணீர் மல்க ரோஜர் பெடரர் விலகினார்.
AFP
பெடரர் விலகுவதை தாங்கிக்கொள்ள முடியாத ரஃபேல் நடாலும் அவருக்கு அருகில் அமர்ந்து கதறி அழுதார். இதை பார்த்த ரசிகர்கள் நெகழ்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து ரோஜர் ஃபெடரரை ஜோகோவிச் உள்ளிட்ட வீரர்கள் தங்களது தோளில் சுமந்து மைதானத்தில் வலம் வந்தனர். ஜோஜர் கூறுகையில், இன்று மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைந்தது.
நிச்சயம் நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். சோகமாக இல்லை. உங்கள் முன் நிற்பதை பெருமையாக கருதுகிறேன். கடைசி போட்டியில் விளையாட முடிந்ததை நினைத்து சந்தோஷப்படுகிறேன். என் மனைவி , குழந்தைகளுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் மனைவி எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார் என கூறியுள்ளார்.