முடிவுக்கு வந்த 24 ஆண்டுகால சகாப்தம்! கடைசி போட்டியில் நீண்டகால போட்டியாளருடன் இணைந்து விளையாடும் ரோஜர் பெடரர்
அதிகமுறை விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தவர் ரோஜர் பெடரர்
40 பிளாக்பாஸ்டர் போட்டிகளில் நடாலுக்கு எதிராக விளையாடியுள்ள பெடரர், இன்று அவருடன் இணைந்து விளையாட உள்ளார்
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ரோஜர் பெடரர், இன்று தனது கடைசி போட்டியில் ரபேல் நடாலுடன் இணைந்து விளையாடுகிறார்.
சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் சமீபத்தில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். தனது 24 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையில் பெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
ஓய்வு குறித்து அவர் எழுதிய கடிதத்தில், ஒவ்வொரு நிமிடமும் எனக்காக வாழ்ந்த எனது மனைவி, உறுதுணையாக திகழ்ந்த குடும்பம், வழிகாட்டிய பயிற்சியாளர்கள், சக போட்டியாளர்கள், நம்பிக்கையூட்டிய ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டிருந்தார்.
Credit: Ben Solomon for The New York Times
இந்த நிலையில் இன்று லண்டனில் நடக்கும் லேவர் கோப்பை தொடரில் பெடரர் தனது கடைசி ஆட்டத்தில் விளையாட உள்ளார். இதில் உலக அணியில் இடம்பெற்றுள்ள ரோஜர் பெடரர், ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலுடன் இணைந்து ஐரோப்பிய அணியை எதிர்கொள்ள உள்ளார்.
AFP Photo
இரண்டு ஜாம்பவான் வீரர்கள் இரட்டையர் பிரிவில் ஒன்றாக விளையாட உள்ளது ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.