24 ஆண்டுகளில் 1500 போட்டிகள்! ஓய்வு பெற்ற ஜாம்பவான் ரோஜர் பெடரர்..வெளியிட்ட உருக்கமான பதிவு
40 நாடுகளில் விளையாடியதை பெரும் பாக்கியமாக கருதுவதாக ரோஜர் பெடரர் உருக்கம்
டென்னிஸ் உலகின் நம்பர் ஒன் வீரராக ரோஜர் பெடரர் 310 வாரங்கள் இருந்துள்ளார்
24 ஆண்டுகள் 24 மணிநேரமாக கடந்ததாக டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் தனது ஓய்வு பதிவில் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது. 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்த பெடரர், அதிக முறை விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றும் சாதனை படைத்தவர்.
PC: File Photo/Getty
தனது ஓய்வு தொடர்பாக ரசிகர்களுக்கு பெடரர் எழுதிய கடிதத்தில், 'டென்னிஸ் ஆட தொடங்குவதற்கு முன்பு பாசல் நகரில் Ball Boy ஆக இருந்தேன். அப்போதைய வீரர்கள் எனக்கு ஜாம்பவான்களாக தெரிந்தனர். நானும் கனவு கண்டேன். அதற்காக கடினமாக உழைத்தேன். ஒரு Ball Boy-யின் கனவை நனவாக்க உதவிய உலகில் உள்ள அனைவருக்கும் என் ஆழ்மனதில் இருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
PC: Clive Brunskill /Allsport via Getty Images
ஒவ்வொரு நிமிடமும் எனக்காக வாழ்ந்த எனது மனைவி, உறுதுணையாக திகழ்ந்த குடும்பம், வழிகாட்டிய பயிற்சியாளர்கள், சக போட்டியாளர்கள், நம்பிக்கையூட்டிய ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. அடுத்த வாரம் லண்டனில் நடைபெறும் லாவெர் கோப்பை டென்னிஸ் போட்டியே எனது கடைசி ஆட்டமாக இருக்கும். எனினும் எதிர்காலத்தில் நிறைய டென்னிஸ் விளையாடுவேன்' என தெரிவித்துள்ளார்.
PC: ADRIAN DENNIS/AGENCE FRANCE-PRESSE/GETTY IMAGES
— Roger Federer (@rogerfederer) September 15, 2022