தன்னிடம் சவால் விட்ட சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர்! வைரலாகும் வீடியோ

Roger Federer Switzerland
By Sivaraj Aug 09, 2022 09:02 AM GMT
Report

* ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் வாக்குறுதியை நிறைவேற்றிய ரோஜர் பெடரர்

* ரோஜர் பெடரர் திடீரென முன்பு தோன்றியதால் ஜூனியர் டென்னிஸ் வீரர் இஸ்யான் அகமது ஆச்சரியமடைந்தார்

சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், தன்னுடன் விளையாட வேண்டும் என்று கூறிய சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்கு பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், சுவிட்சர்லாந்தின் பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரிடம் 6 வயது சிறுவனான இஸ்யான் அகமது சவால் விட்டான்.

அதாவது, நீங்கள் தயவு செய்து எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகள் விளையாட முடியுமா? அப்போது தான் நான் தொழில்முறை வீரராக உங்களுக்கு எதிராக விளையாட முடியும். எனக்கு வாக்குறுதி தருகிறீர்களா? என கேட்டான்.

அதற்கு ரோஜர் பெடரர் சிரித்துக் கொண்டே வாக்குறுதி அளிக்கிறேன் என்று கூறினார். தற்போது இஸ்யான் அகமது (11) ஜூனியர்ஸ் சுற்றுப்பயணத்தில் சிறந்த வீரராக உருவெடுத்துள்ளார். அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் என இரண்டிலும் நம்பர் ஒன் வீரராக மாறியுள்ளார்.

இந்த நிலையில், தனது பயிற்சியாளருடன் உணவகத்திற்கு சென்ற இஸ்யான் அகமதிடம், உணவக பணியாளர் வந்து தமது உரிமையாளர் உங்களது மிகப்பெரிய ரசிகர் என்றும், உங்களுடன் அவர் செல்ஃபி எடுக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.





இதனைக் கேட்டு ஒரு நிமிடம் திகைத்துப் போன இஸ்யானிடம் வந்த பெண் தனது டி-சர்ட்டியில் சிறுவனின் புகைப்படம் இருப்பதை அவரிடம் காட்டினார். அதனைப் பார்த்து ஆச்சரியமடைந்த இஸ்யான், குறித்த பெண்ணுடன் குழப்பத்திலேயே புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அதன் பின்னர், இஸ்யான் அகமது மைதானத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவரது பதாகைகளை வைத்துக் கொண்டு, உரக்கக் கோஷமிட்டு உற்சாகப்படுத்தினர். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற குழப்பத்தில் சிறுவன் இருந்தபோது, இந்த சம்பவங்களை எல்லாம் டிவி மானிட்டரில் கண்காணித்து வந்த பெடரர், திடீரென இஸ்யான் முன் தோன்றினார். தான் கூறியது போல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக தெரிவித்த அவர், இருவரும் டென்னிஸ் விளையாடலாம் என்றார்.

இதனால் இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோன சிறுவன், அவருடன் ஆர்வமாக டென்னிஸ் விளையாடினான். பின்னர் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இஸ்யான் அகமது பதிவிடும்போது,

'ஒரு வாக்குறுதியை கொடுத்த GOAT (ரோஜர் பெடரர்) அதனை நிறைவேற்றியுள்ளார். அதனால் தான் அவர் தனித்துவமான ஆளாக தெரிகிறார். என் வாழ்வில் சிறந்த நாளாக மாற்றியதற்கும், இந்த நினைவுகளை கொடுத்ததற்கும் மிக்க நன்றி மிஸ்டர் பெடரர். வாக்குறுதியை காப்பாற்றிய உங்களுக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாய் இருப்பேன்! பிறந்த நாள் வாழ்த்துக்கள் G.O.A.T (Greatest of All Time)' என தெரிவித்துள்ளார்.

சிறுவனுக்கு அளித்த வாக்குறுதியை ரோஜர் பெடரர் நிறைவேற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.     

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US