மனைவியை அழகான பெண் என வர்ணித்த ரசிகர்., யாரும் எதிர்பாராத பதிலளித்த ரோஹன் போபண்ணா!
ரோஹன் போபண்ணாவின் மனைவியை "மிக அழகான பெண்" என்று அவரது புகைப்படத்துடன் ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவிற்கு, ரோஹன் போபண்ணா யாரும் எதிர்பாராத பதிலை அளித்து ஆச்சரியப்படுத்தினார்.
அவுஸ்திரேலிய ஓபன் 2023 தொடரில், கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய டென்னிஸ் நட்சத்திரங்கள் ரோகன் போபண்ணா மற்றும் சானியா மிர்சா ஆகியோர் வெள்ளிக்கிழமை போராடி தோல்வியடைந்தனர்.
மெல்போர்ன் பார்க்கில், ராட் லேவர் அரங்கில் நடந்த போட்டியில் பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி, ரஃபேல் மாடோஸ் ஜோடியிடம் போபண்ணா, சானியா ஜோடி நேர் செட்களில் (6-7, 2-6) தோல்வியடைந்தது. இது சானியா மிர்சாவின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியாகும்.
கிராண்ட்ஸ்லாமில் கடைசியாக விளையாடுவதால் மெல்போர்ன் பூங்காவில் அவரது மகன் இஷான் உட்பட சானியாவின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர், அதே நேரத்தில் போபண்ணாவின் மனைவி மற்றும் குழந்தைகளும் இந்திய அணிக்காக விளையாடும் ஜோடியை உற்சாகப்படுத்துவதைக் காண முடிந்தது.
போட்டிக்குப் பிறகு, ட்விட்டரில் ரசிகர் ஒருவர் ராட் லேவர் அரங்கில் காணப்பட்ட போபண்ணாவின் மனைவி சுப்ரியா அன்னையாவின் புகைப்படத்தை பகிர்ந்து "போபண்ணாவின் மனைவி தான் இதுவரை நன் பார்த்ததிலேயே மிக அழகான பெண்" என்று எழுதினர்.
இந்த வைரலான ட்வீட்டுக்கு எதிர்பாராத விதமாக போபண்ணாவே "நான் ஒப்புக்கொள்கிறேன்" என பதிலளித்து ஆச்சரியப்படுத்தினார்.
I agree ??... https://t.co/XVUjZWI1Rm
— Rohan Bopanna (@rohanbopanna) January 28, 2023
பெங்களூரூவைச் சேர்ந்த போபண்ணா 2012-ல் சுப்ரியா அன்னையாவை திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.