அரையிறுதிக்கு தகுதிபெற்றதற்கு வாழ்த்திய சானியா மிர்சா..கோப்பையை முத்தமிட்டு சரித்திரம் படைத்த டென்னிஸ் பார்ட்னர்
அவுஸ்திரேலிய ஓபன் தொடரில் இந்திய வீரர் ரோஹன் போப்பண்ணா கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.
அவுஸ்திரேலிய ஓபன்
மெல்போர்னில் நடந்த அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றில், இந்தியாவின் ரோஹன் போப்பண்ணா - மேத்யூ எப்டென் (அவுஸ்திரேலியா) ஜோடி, இத்தாலியின் சிமோன் போலெலி மற்றும் ஆன்ரீயா வவாசோரி ஜோடியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் 7-6 (7-0), 7-5 என்ற செட்களில் ரோஹன் போப்பண்ணா - மேத்யூ எப்டென் ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
Ciro De Luca/Reuters
கிராண்ட்ஸ்லாம் பட்டம்
இந்த வெற்றியின் மூலம் ரோஹன் போப்பண்ணா அதிக வயதில் (43) கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் எனும் சரித்திரம் படைத்தார்.
AP
நெதர்லாந்தின் ஜீன்-ஜூலியன் ரோஜர் இதற்கு முன்பாக, பிரெஞ்சு ஓபன் இரட்டையர் சுற்றில் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தார். அப்போது அவருக்கு வயது 40.
இந்திய வீரரான ரோஹன் போப்பண்ணா, கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸாவுடன் இணைந்து பல போட்டிகளில் விளையாடியுள்ளார்.
முன்னதாக, அவர் அரையிறுதிக்கு தகுதிபெற்றபோது சானியா மிர்ஸா தனது எக்ஸ் பக்கத்தில் பெருமைகொள்வதாக குறிப்பிட்டு வாழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |