தந்தையின் ரூ 647,000 கோடி நிறுவனத்தில் இருந்து வெளியேறி... சொந்தக்காலில் நின்ற மகன்: அவரது சொத்து மதிப்பு
வெற்றிகரமான குடும்ப தொழிலைக் கொண்டவர்கள் பெரும்பாலும் அதில் இணைந்து வேலை செய்வதையே விரும்புவார்கள். சில அரிதான நபர்கள் மட்டும் கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாடு மூலம் தங்கள் சொந்த அடையாளத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய
அப்படியான அரிதான நபர்களில் ஒருவர் ரோஹன் மூர்த்தி. இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் நிறுவனர் நாராயண் மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தியின் மகன்.
ரோஹன் மூர்த்தியின் சகோதரி தான் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை திருமணம் செய்துகொண்டுள்ளார். பெங்களூருவில் உள்ள Bishop Cotton ஆண்கள் பாடசாலையில் கல்வி பயின்ற ரோஹன் மூர்த்தி, Cornell பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.
பின்னர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இதன் பின்னர் ஒரு குறுகிய காலத்திற்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.
ஈவுத்தொகை வருமானமாக
ஆனால் அங்கிருந்து வெளியேறிய ரோஹன், 2014ல் Soroco என்ற நிறுவனத்தை இணைந்து நிறுவியுள்ளார். தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பது 15 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது.
அத்துடன் உலகமெங்கிலும் பணியாற்றும் 500 மில்லியன் திறன்வாய்ந்த ஊழியர்களும் உள்ளனர். 2022 ல் மட்டும் Soroco நிறுவனம் ரூ 148 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
நாராயண் மூர்த்தியின் மகன் என்பதால் 5.55 லட்சம் கோடி மதிப்பிலான இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து 6,08,12,892 பங்குகளை சொந்தமாக கொண்டுள்ளார். இதில் இருந்து ஈவுத்தொகை வருமானமாக ரூ 106.42 கோடி பெறுகிறார். இ
து அவரது மொத்த சொத்துமதிப்பில் ஒருபகுதி என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, மிக சமீபத்தில் தான் இவரது 4 வயது மகன் சுமார் 240 கோடி மதிப்பிலான இன்ஃபோசிஸ் பங்குகளை தமது தாத்தா நாராயண மூர்த்தியிடம் இருந்து பரிசாக பெற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |