நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் - ரோஹித் ஷர்மா உருக்கம்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் ஷர்மா வான்கடே மைதானம் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
ரோஹித் ஷர்மா
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸின் தலைவராக செயல்பட்ட ரோஹித் ஷர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
மும்பையின் வான்கடே மைதானம் அவருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி சதவீதம் 61.9 சதவீதம் ஆகும்.
இந்த நிலையில், வான்கடே மைதானத்தில் ரோஹித் ஷர்மாவின் பெயரில் புதிய ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரோஹித் ஷர்மா உருக்கத்துடன் பேசியுள்ளார்.
அவர் வான்கடே மைதானம் குறித்து கூறுகையில், "இரயிலில் இவ்வழியாக செல்லும்போதெல்லாம் வான்கடே மைதானத்தை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என நினைத்துக் கொண்டே பயணித்த நாட்களை நினைவுகூர்கிறேன்.
இந்த ஸ்டாண்ட் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இது எப்போதும் நிலைத்து நிற்கப் போகிகிறது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |