கடைசி டெஸ்டில் சதம் விளாசிய கேப்டன் ரோஹித், சுப்மன் கில்! ஆர்ப்பரித்த ரசிகர்கள்
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் சதம் அடித்தனர்.
ஜெய்ஸ்வால் அதிரடி
தரம்சாலாவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 218 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக 58 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்கள் விளாசினார்.
India youngster Yashasvi Jaiswal has continued his record-breaking run with the bat during the fifth and final Test against England ?#INDvENG | #WTC25https://t.co/sPtL46DDCT
— ICC (@ICC) March 8, 2024
ரோஹித் - கில் பார்ட்னர்ஷிப்
பின்னர் வந்த சுப்மன் கில், அணித்தலைவர் ரோஹித் சர்மாவுடன் இணைந்து நங்கூர ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவர்களின் கூட்டணி மூலம் இந்திய அணி 200 ஓட்டங்களை கடந்தது. ரோஹித் தனது 12வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.
அதன் பின்னர் கில்லும் 137 பந்துகளில் சதம் அடித்தார். இது அவரது 2வது டெஸ்ட் சதம் ஆகும். இவர்களின் பார்ட்னர்ஷிப் 150 ஓட்டங்களை கடந்தது.
What a performance from Rohit Sharma and Shubman Gill ?#WTC25 | #INDvENG ?: https://t.co/SAT4QPRCfT pic.twitter.com/mOFuBRokWv
— ICC (@ICC) March 8, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |