விளையாட்டு அரங்கில் மோதிக்கொண்ட ரோஹித் சர்மா-ஹர்திக் பாண்டியா ரசிகர்கள் (வீடியோ)
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு அரங்கில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியபோது, அங்கு கூடியிருந்த ரசிகர்களிடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.
விளையாட்டு அரங்கில் மோதிக்கொண்ட ரசிகர்கள்
IPL 2024 தொடரின் 5வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
அபாரமாக ஆடிய ரோஹித் சர்மா 29 பந்துகளில் 43 ஓட்டங்கள் விளாசினார்.
நமன் தீர் 10 பந்துகளில் 20 ஓட்டங்களும், டேவால்டு ப்ரேவிஸ் 38 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்களும் எடுத்தனர்.
அதற்கு முன், தலைவர் பதவி தொடர்பில் போட்டி தொடங்கும் முன்பே ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவை சுற்றி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ரோஹித் கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து ஹர்திக் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
போட்டி நடந்து கொண்டிருந்த போது, ரோஹித் மற்றும் ஹர்திக் ரசிகர்கள் சண்டையிட்டுள்ளனர். இந்த சண்டைக்கான காரணங்கள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
ஆனால் அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
A fight between hardik fans and Rohit Sharma fans #MIvsGT #HardikPandya #RohitSharma𓃵 pic.twitter.com/M6DUZJiboM
— Ankit (@BhincharAn97434) March 25, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |