உனக்காக எல்லாவற்றையும் நான் செய்ய வேண்டுமா? வாஷிங்டன் சுந்தரிடம் கேட்ட ரோஹித் ஷர்மா - வைரல் வீடியோ
இலங்கை அணிக்கு எதிரானப் போட்டியில் வாஷிங்டன் சுந்தரை பார்த்து, ரோஹித் ஷர்மா கேள்வி கேட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
ரோஹித் ஷர்மா அரைசதம்
கொழும்பில் நடந்த இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டை ஆனது.
இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா 47 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் அவர் ஃபீல்டிங்கில் ஸ்லிப்பாக நின்றிருந்தார். வாஷிங்டன் சுந்தரின் ஓவரில் வெல்லாலகேவின் காலில் பந்துபட்டது போல் சென்றது.
This guy is love
— Secular Chad (@SachabhartiyaRW) August 2, 2024
Unfiltered ?? pic.twitter.com/ZzUYPOUMH8
ஏன் என்னைப் பார்க்கிறாய்?
அதற்கு சுந்தர் நடுவரின் அவுட் கேட்க அவர் அசையாமல் இருந்தார். உடனே கேப்டன் ரோஹித்தைப் பார்த்தார் சுந்தர். கே.எல்.ராகுலும் அது அவுட் என உறுதியாக தெரியவில்லை.
இதனால் சுந்தர் DRS கோரலாமா என்பது போல் ரோஹித்தை பார்க்க, அவர் ''ஏன் என்னைப் பார்க்கிறாய்? உனக்காக நான் எல்லாவற்றையும் செய்ய வேண்டுமா?'' என்று கூறிவிட்டு சிரித்தார்.
அவர் பேசியது ஸ்டம்புகளுக்கு கீழ் இருந்த மைக்கில் பதிவானது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது பரவி வருகிறது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |