ஆட்டம் காட்டிய ரோகித்தை துல்லியமான போல்டாக்கி தெறிக்கவிட்ட ஆண்டர்சன்! ஆக்ரோசமாக கத்திய வீடியோ
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன் ரோகித் மற்றும் சட்டீஸ்வர் புஜாராவின் விக்கெட்டை வீழ்த்திய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆடி வரும் இந்திய அணி இரண்டாம் நாளான இன்று சற்று முன் வரை 7 விக்கெட் இழப்பிற்கு 336 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இதில் இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் நேற்று சதமடித்திருந்த நிலையில், இன்று 129 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
You absolute beauty @jimmy9!! ?
— England Cricket (@englandcricket) August 12, 2021
Scorecard/Clips: https://t.co/GW3VJ3wfDv
??????? #ENGvIND ?? |#RedForRuth pic.twitter.com/fXzZRb5YPY
இந்நிலையில், இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய துவக்க வீரர் ரோகித்சர்மாவை ஜேமி ஆண்டர்சன் தன்னுடைய துல்லியமான பந்து வீச்சின் மூலம் போல்டாக்கி வெளியேற்றினார்.
ஏனெனில் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வந்த ரோகித் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்து அரைசதம் அடித்து விளையாடி வந்தார்.
அவரை இங்கிலாந்து வீரர்கள் அவுட்டாக்க முடியாமல் திணறிய போது, ஆண்டர் சிறப்பாக வீசி அவுட்டாக்கினார். அப்போது ஆண்ட்ர்சன் ஆக்ரோசமாக கத்தினார்.
ANDERSON GETS ANOTHER ONE! ?
— Sony Sports (@SonySportsIndia) August 12, 2021
Pujara's dry run continues as he departs for 9 ☝?
Tune into Sony Six (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/AwcwLCPFGm ) now! ?#ENGvINDOnlyOnSonyTen #BackOurBoys #JamesAnderson pic.twitter.com/yVdo40XMVQ
அதுமட்டுமின்றி இந்தியாவின் தடுப்புச் சுவர் என்று தற்போது அழைக்கப்படும் சட்டீஸ்வர் புஜாராவையும், வந்த வேகத்தில் வீட்டிற்கு அனுப்பினார்.
ரோகித்சர்மா 145 பந்தில் 83 ஓட்டங்களும், புஜாரா 23 பந்தில் 9 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் பவுலியன் திரும்பியது குறிப்பிடத்தக்கது.