கோலியை அலட்சியம் செய்தாரா ரோஹித்? - இணையத்தில் வைரலாகும் வீடியோ
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் கோலியை கேப்டன் ரோஹித் சர்மா அலட்சியப்படுத்தியதாக சர்ச்சை வெடித்துள்ளது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதல்முறையாக இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா பொறுப்பேற்றார். கேப்டன் பதவி இல்லாமல் ரோஹித் ஷர்மா தலைமையில் விராட் கோலி விளையாடும் முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில் இப்போட்டியில் முதலில் கோலியின் ஆலோசனையைக் கேட்ட ரோஹித் சர்மா ஹேசன் ஹோல்டர், பாபியல் ஆலன் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை மெல்ல உயர்த்த தொடங்கிய போது மீண்டும் ஆலோசனை வழங்க வந்தார். ஆனால் அவரை தடுத்து நிறுத்தி ரோஹித் ஷர்மா அலட்சியப்படுத்தியதாக புகைப்படங்கள் இணையத்தில் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Isko pic Banake help bolte hai chomu ????♂️?♂️?♂️ pic.twitter.com/NzQRxIOljW
— Kaygee18 (@Kaygee1803) February 6, 2022