எல்லாம் சரியாக தான் செய்தோம் ஆனால்.. வேதனையுடன் கூறிய ரோகித்
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து அணித்தலைவர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 4 தோல்விகளை கண்ட மும்பை இந்தியன்ஸ் அணி, நேற்று நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைந்தது.
இதனால் கடுமையான விமர்சனங்களை மும்பை இந்தியன்ஸ் எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து மும்பை அணித்தலைவர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், 'அணியில் எந்த ஒரு தவறையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அனைத்தையும் சரியாக தான் செய்தோம். வெற்றி பெறும் நேரத்தில் தேவையில்லாத 2 ரன்-அவுட்டுகள் எங்களை பின்நோக்கி இழுத்துவிட்டது.
பஞ்சாப் அணியின் பந்துவீச்சு படை சிறப்பாக செயல்பட்டது தான் காரணம். நாங்கள் ஒரு மன எண்ணத்தில் களமிறங்கினோம். ஆனால் முழுவதுமாக மாறி அமைந்தது.
தவறுகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டு சிறப்பாக comeback கொடுப்போம். சூழ்நிலைகளுக்கு ஏற்ப விளையாடினால் 199 என்பது சுலபமாக அடிக்கக்கூடிய இலக்கு தான். மாற்றிக் கொண்டு வருகிறோம்' என தெரிவித்துள்ளார்.