கோலிக்கு பதிலாக இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக பொறுப்பு ஏற்கும் நட்சத்திரம்! வெளியான முக்கிய தகவல்
கோலிக்கு பதிலாக இந்திய டி20 அணியின் கேப்டனாக பொறுப்பேற்கும் வாய்ப்பு ரோகித் சர்மாவுக்கு மிகவும் அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கு முடிந்த பின் இந்திய டி20 அணி கேப்டன் பதிவியலிருந்து தான் விலகுவதாக கோலி ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
இந்நிலையில், கோலிக்கு பதிலாக யார் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார்கள் என ரசிகர்களிடையே எதிர்பார்புடன் இருக்கிறார்கள்.
இந்நிலையில். எதிர்வரும் நாட்டிகளில் பிசிசிஐ இந்திய டி20 அணியின் புதிய கேப்டனின் பெயரை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோலியிடம் இருந்து கேப்டன் பதவியை ஏற்கும் வாய்ப்பு ரோகித் சர்மாவுக்கு மிகவும் அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு, இந்திய அணிக்கான புதிய டி20 கேப்டனை தேர்வு செய்யும் கூட்டத்திற்கு திட்டமிட்டுள்ளது.
தற்போது, இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக இருக்கும் ரோகித்துக்கு கேப்டன் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும், எதிர்வரவிருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ரோகித்துக்கு ஓய்வு அளிக்கப்படும் என்றும், அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் இந்திய அணி தற்காலிக கேட்னாக செயல்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.