ஏன் நீ கேட்கல? தினேஷ் கார்த்திக்கின் கழுத்தை நெறித்த ரோகித் சர்மா! வைரலாகும் வீடியோ
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இருமுறை அவுட் கேட்காத தினேஷ் கார்த்திக்
அமைதியாக இருந்த தினேஷ் கார்த்திக்கிடம் சென்று விளையாட்டாக கழுத்தை நெறித்த ரோகித் சர்மா
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கின் கழுத்தை நெறித்துக்கொண்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மொஹாலியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய இன்னிங்சின்போது, சாஹல் பந்துவீச்சில் ஸ்டீவன் ஸ்மித் எல்.பி.டபிள்யூ ஆனார்.
ஆனால் சாஹல் மற்றும் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இருவரும் அவுட் கேட்கவில்லை. பின்னர் திரையில் காட்டப்பட்டபோது அது அவுட் என தெரிந்தது. இதனால் ரோகித் சர்மா அதிருப்தியடைந்தார்.
#INDvsAUS #umeshyadav #AUSvsIND
— Girish (@Girish_G_Patil) September 20, 2022
What Rohit told to DK??? pic.twitter.com/3JHkvoJjXP
அதன் பின்னரும் இதேபோல் மேக்ஸ்வெல் துடுப்பாட்டம் செய்தபோது, உமேஷ் யாதவ் வீசிய பந்து அவரது பேட்டில் பட்டு தினேஷ் கார்த்திக்கிடம் சென்றது. பந்து பேட்டில் பட்ட சத்தம் அனைவருக்கும் கேட்டது. ஆனால் தினேஷ் கார்த்திக் அவுட் கேட்காமல் அமைதியாக இருந்தார்.
இதனால் கோபமடைந்த ரோகித் சர்மா அவரிடம் வந்து கழுத்தை நெறித்துக் கொண்டு, சரியா ரிவ்யூ கேட்க மாட்டியா என்று கேட்டார். ஆனால் அவர் விளையாட்டாக தான் இப்படி நடந்துகொண்டார். இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.