சிக்ஸர் அடித்து சதமடித்த ரோகித்! கொண்டாடிய கோலி: வைரலாகும் வீடியோ
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், ரோகித் சர்மா சதம் அடித்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வலுவான இலக்கை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது.
மூன்றாம் நாளான இன்று சற்று முன் வரை இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 215 ஓட்டங்கள் 117 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது. இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித்சர்மா சதம் அடித்தார்.
First century outside India for the Hitman! ?
— Sony Sports (@SonySportsIndia) September 4, 2021
He gets there with a monster six over long on!
Tune into Sony Six (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/AwcwLCPFGm ) now! ?#ENGvINDOnlyOnSonyTen #BackOurBoys #RohitSharma pic.twitter.com/4HDSE276Ow
94 ஓட்டங்கள் அடித்த அவர், மொயின் அலி வீசிய ஓவரின் போது சிக்ஸர் அடித்து தன்னுடைய சதத்தை பதிவு செய்தார். அப்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, ரோகித்தின் சதத்தை எஸ்...எஸ்... என்று கொண்டாடினார்.
அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களும், இங்கிலாந்து அணி 290 ஓட்டங்களும் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.