முதல் போட்டியில் அவுட்... இந்த முறை சிக்ஸர்: 50 ஓட்டம் அடித்த அடுத்த பந்திலே சிக்ஸர் பறக்க விட்ட ரோகித் வீடியோ
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வீரரான ரோகித்சர்மா அடித்த சிக்ஸர் வீடியோவை அவரது ரசிகர்கள் டிரண்டாக்கி வருகின்றனர்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று துவங்கியது.
அதன் படி டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ரோகித்சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.
ரோகித்சர்மா ஆரம்பத்தில் இருந்தே, இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை அடித்து ஆட துவங்கினார். அதன் படி ஆட்டத்தின் 15-வது ஓவரை வீசிய சாம்கரன் பந்து வீச்சில், அவர் நான்கு பவுண்டரிகளை பறக்கவிட்டார்.
இவருக்கு துணையாக கே.எல்.ராகுலும் சிறப்பான ஆட்டத்தை கொடுத்ததால், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி நூறு ஓட்டங்களை தொட்டது. தொடர்ந்து அடித்து ஆடி வந்த ரோகித்சர்மா 145 பந்தில் 83 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
சற்று முன் வரை இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது. கே.எல்.ராகுல் 33 ஓட்டங்களுடனும், புஜாரா ஓட்டம் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
Hittu ?#RohitSharma @TrendsRohit pic.twitter.com/XoA3TS9P6q
— Veera Brahmam ✨ (@ImVeera45) August 12, 2021
இப்போட்டியில் சதமடித்த ரோகித்சர்மா, அடுத்த பந்திலே சிக்ஸர் பறக்கவிட்டார். முந்தைய டெஸ்ட் போட்டியின் போது ரோகித்சர்மா ஷாட் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார்.
ஆனால், ரோகித்தை பொறுத்தவரை அது போன்ற பந்தை சிக்ஸருக்கே பறகக்விடுவார். ஆனால் இந்த முறை அவுட்டானது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
அதே போன்ற பந்தை அவர் 50 ஓட்டங்களை கடந்த பின்பு மார்க் அவுட், வீச அதை ரோகித் அப்படியே லெக்திசை பக்கம் திருப்பி சிக்ஸர் அடித்தார்.
இதை அவரது ரசிகர்கள், முதல் டெஸ்ட் போட்டிக்கு கொடுத்த பதிலடி இது தான் என்று டிரண்ட் ஆக்கி வருகின்றனர். இதுவே இந்த 2021-ஆம் ஆண்டில் வெளிநாட்டில் இந்திய துவக்க அணி விக்கெட் இழப்பின்றி நூறு ஓட்டங்கள் அடித்த முதல் டெஸ்ட் போட்டி ஆகும்.