கமெண்ட் அடித்த சிராஜின் தலை ஒரு அடி அடித்த ரோகித் சர்மா! வைரலாகும் வீடியோ
நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் ரோகித்சர்மா, மொகதுசிராஜ் தலையில் அடித்த வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, மைதானத்தின் டக் அவுட்டில் ரோகித் சக வீரர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தார்.
Why did Rohit hit Siraj???#INDvNZ #RohitSharma pic.twitter.com/EjqnUXts3v
— Bhanu? (@its_mebhanu) November 17, 2021
அப்போது, இளம் வீரரான மொகமது சிராஜ், அங்கிருந்த தொலைக்காட்சியை பார்த்து ஏதோ கமெண்ட் அடித்தார். உடனே ரோகித் அவரது தலையில் ஒரு செல்ல அடி அடித்தார்.
அதன் பின் மொகமது சிராஜ் சிரித்தபடியே திரும்பிக் கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.