கெயில் அடித்த பந்து தாக்கி தடுமாறி விழுந்து அவுட்டான கே.எல்.ராகுல்! நடுவரை தடுத்து விக்கெட்டை விட்டுக்கொடுத்த குர்ணால்-ரோகித்! வைரல் வீடியோ
அபு தாபியில் நேற்று நடந்த பஞ்சாப்-மும்பை போட்டியின் போது கே.எல்.ராகுலின் விக்கெட்டை குர்ணால்-ரோகித் விட்டுக்கொடுத்த வீடியோ இணையத்தில் பயங்கர வைரலாகியுள்ளது.
அபு தாபியில் நேற்று நடந்த 42வது போட்டியில் பஞ்சாப்-மும்பை அணிகள் மோதின.
இப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பை வெற்றிப்பெற்றது.
போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5வது ஓவரை மும்பை வீரர் குர்ணால் பாண்டியா வீசினார்.
5வது ஓவரின் 5வது பந்தை குர்ணால் வீச பேட்டிங் செய்த கெயில் நேராக விளாசினார்.
எதிர்பாராதவிதமாக பந்து எதிரே இருந்த பஞ்சாப் கேப்டன் ராகுல் மீது பலமாக தாக்கியதில் அவர் தடுமாறி விழுந்தார்.
உடனே பந்தை பிடித்த குர்ணால், ராகுல் கோட்டிற்குள் வருவதற்குள் ஸ்டம்ப் மீது எறிந்தார்.
பின் குர்ணால் கள நடுவரிடம் அவுட் என முறையிட்டார். கள நடுவர் டிவி அம்பையர் என சிக்னல் காட்டுவதற்குள், குர்ணால் பாண்டியாவும் ரோகித் சர்மாவும் வேண்டாம், அவுட் என முறையிட்ட தங்கள் முடிவில் இருந்து பின்வாங்குவதாக கள நடுவரிடம் தெரிவித்தனர்.
உடனே கள நடுவரும் டிவி அம்பையரின் கவனத்திற்கு கொண்டு செல்வதை நிறுத்தினார்.
Real sportsmanship is more important than winning a Cup? (MI)You guys always won the hearts of cricket fans?✨ #MumbaiIndians #MIvsPBKS #HardikPandya #Krunalpandya #RohitSharma #Trending #Champions pic.twitter.com/vJhxSZNUnf
— Santhosh Chand (@SanthoshChand2) September 29, 2021
இதனையடுத்து, குர்ணால்-ரோகித்தின் நேர்மை மனப்பான்மையை கே.எல்.ராகுல் பாராட்டினார்.
கே.எல்.ராகுல் மட்டுமின்றி குறித்த வீடியோவை இணையத்தில் வைரலாகியுள்ள கிரிக்கெட் ரசிகர்கள், குர்ணால்-ரோகித்தின் நேர்மை மனப்பான்மையை பாராட்டி வருகின்றனர்.