இந்திய அணியின் கேப்டனாக இவர் வருவார்... கோஹ்லியே அதை அறிவிப்பார்: உறுதியாக சொல்லும் முன்னாள் வீரர்
இந்திய அணிக்கு ஒவ்வொரு வடிவலான தொடருக்கு கேப்டன்கள் நியமிக்கப்படுவார்கள், அதை விரைவில் பார்க்கலாம் என்று கிரன் மோர் கூறியுள்ளார்.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என விளையாடி வருகிறது. ஆனால் இதில் விரைவில் மாற்றம் வரலாம் என்று கூறப்படுகிறது.
பிசிசிஐயும் இது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான கிரண் மோர், விரைவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்சியில் மாற்றங்கள் இருக்கும் என கருதுகிறேன்.
ஒவ்வொரு வடிவிலான போட்டிக்கும் ஒரு கேப்டன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய கிரிக்கெட் வாரியமும் இருப்பதாக நினைக்கிறேன். இதனால் ரோஹித் சர்மா விரைவில் இந்திய அணியின் கேப்டனாக வாய்ப்புள்ளது,
இதனை கோஹ்லி அறிவிப்பார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன,
விரைவில் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்த மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் நிச்சயம் துவங்கும், அதன்பிறகு மாற்றங்களும் நிகழும் என கூறியுள்ளார்.