இதை கண்டு கொள்ள கூடாது! இந்திய அணிக்கு கேப்டன் ஆன பின்பு ரோகித் சொன்ன ரகசியம்
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டி தலைவராக ரோகித் நியமிக்கப்பட்ட நிலையில், அது குறித்து முதன் முறையாக அவர் பேட்டி அளித்துள்ளார்.
இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகிய பின்பு, ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து தற்போது பிசிசிஐ கோலியை ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விலக்கி, ரோகித்தை ஒருநாள் அணி கேப்டனாக நியமித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து ரோகித் தற்போது அழுத்துள்ள பேட்டி ஒன்றில், இந்திய அணிக்காக விளையாடும் போது, அழுத்தம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இது எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும்.
மக்களை பொறுத்தவரை நேர்மறையாக மற்றும் எதிர்மறையாக பேசிக் கொண்டு இருபார்கள், இதில் கவனம் செலுத்தாமல், நம்முடைய வேலையில் கவனம் செலுத்துவது தான் முக்கியம்.
ஏனெனில் அவர்கள் பேசுவதை நிறுத்த முடியாது. வெளியில் நடக்கும் பேச்சுக்கள் முக்கியாமானவை கிடையாது என்று நான் நினைக்கிறேன். எங்களைப் பொறுத்தவரை, நாம் என்ன நினைக்கிறோம் என்பது முக்கியம்.
நீங்கள் வீரர்களுக்கு இடையே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்கா விரும்புவீர்கள், அதுவே நாங்கள் விரும்பும் இலக்கை அடைய எங்களுக்கு உதவும்.
பயிற்சியாளரான, ராகுல் டிராவிட் வெளிப்படையாக அதைச் செய்ய எங்களுக்கு உதவுவார் என்று நம்புகிறேன், நாங்கள் அதை எதிர்நோக்குகிறோம் என்று கூறியுள்ளார்.