விராட் கோலியின் மோசமான ஆட்டத்திற்கு நீங்களே காரணம்: ரோஹித் சர்மா பரபரப்பு புகார்!
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையே வரும் புதன்கிழமை மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கவுள்ள நிலையில் விராட் கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அதற்கு பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தான் காரணம் என காட்டமாக பதிலளித்துள்ளார்.
நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலி மொத்தமாகவே 50 ரன்ககளை மட்டுமே சேர்த்தார்.
இதில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் மட்டும் தான் அதிகப்பட்டமாக 26 ரன்களை கோலியால் சேர்க்க முடிந்தது. 2015ம் ஆண்டுக்கு பிறகு இதுவே விராட் கோலியின் ஒருநாள் போட்டி தொடர்களில் மிகக்குறைந்த ரன்களாகும்.
இந்த நிலையில் வரும் புதன்கிழமை வெஸ்ட் இண்டிஸ்க்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டிகள் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் ரோஹித் சர்மாவிடம் விராட் கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த விதமாக அதற்கு பத்திரிகையாளர்கள் ஆகிய நீங்கள் தான் காரணம்.
நான் பார்த்தவரை அவர் மன அளவில் பெரிய வெற்றிடத்தில் இருப்பதாக தெரிகிறது. மற்றபடி நெருக்கடியான சூழ்நிலையை சமாளிப்பது குறித்து அவருக்கு நன்கு தெரியும்.பத்திரிகையாளர்கள் ஆகிய நீங்கள் சிறிது காலம் அமைதியாக இருந்தால் அவர் கண்டிப்பாக பழைய ஃபார்மிற்கு வருவார் என தெரிவித்துள்ளார்.