இங்கிலாந்திடம் சொந்த மண்ணில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி! கேப்டன் ரோகித் கூறிய வார்த்தை
இங்கிலாந்து எதிரான முதல் டெஸ்டில் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 231 ரன்கள் இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயித்தது.
அதன்படி, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு, இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் டாம் ஹார்ட்லே (Tom Hartley) சிம்மசொப்பமானமாக விளங்கினார்.
அவரது பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் (15), சுப்மன் கில் (0), கேப்டன் ரோகித் சர்மா (39) தொடர்ந்து வெளியேறினர். கே.எல்.ராகுல் 22 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜோ ரூட் ஓவரில் ஆட்டமிழந்தார்.
K.V.S.Giri
அதன் பின்னர் அக்சர் படேல் 17 ஓட்டங்களில் ஹார்ட்லே ஓவரில் அவுட் ஆனார். ஷ்ரேயாஸ் ஐயர் (13), ஜடேஜா (2) சொதப்பிய நிலையில், ஸ்ரீகர் பரத் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் வெற்றிக்காக போராடினர்.
ஆனால் அவர்களும் தலா 28 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஹார்ட்லே பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். கடைசி விக்கெட்டாக சிராஜ் (12) வெளியேற, இந்திய அணி 202 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. டாம் ஹார்ட்லே 7 விக்கெட்டுகளும், ஜோ ரூட் மற்றும் லீச் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
தோல்விக்கு பின் பேசிய ரோகித் சர்மா, 'நான்கு நாட்கள் கிரிக்கெட் விளையாடப்பட்டது, அதனால் எங்கே தவறு நடந்தது என்பதைக் குறிப்பிடுவது கடினம்.
190 ஓட்டங்கள் முன்னிலை பெற்றதால் நாங்கள் போட்டியில் அதிகம் இருக்கிறோம் என்று நினைத்தோம். ஆனால், 230 ஓட்டங்களை கடக்க நினைத்து ஸ்கோரை எட்டும் அளவுக்கு நாங்கள் பேட்டிங் செய்யவில்லை. இது தொடரின் முதல் ஆட்டம், எனவே வீரர்கள் அதில் இருந்து கற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.
AP Photo
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |