பயமா இருக்கு! வேறு வழியில்லை... டாஸ் வென்ற பின் பேசிய மும்பை கேப்டன் ரோகித்
ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணியும், மற்றொரு போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் மும்பை அணிக்கு முக்கியமான போட்டி ஆகும்.
மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் 171 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுகிடையே சற்று முன்பு டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ரோகித்சர்மா, நாங்கள் முதலில் பேட் செய்கிறோம்.
That smile from Rohit Sharma? #SRHvMI pic.twitter.com/af8k37au6W
— CricTracker (@Cricketracker) October 8, 2021
ஏனெனில், வேறு வழியில்லை முதலில் பேட் செய்து தான் ஆக வேண்டும்.
அந்தளவிற்கு ஓட்டங்களை குவிக்க வேண்டும். எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுக்கப் போகிறோம், கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது என்று கூறினார்.
இப்போட்டியில் முக்கியமாக பியூஷ் சாவ்லாவை மும்பைஇந்தியன்ஸ் அணி இறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.