ஏ என்ன பண்ற! தமிழக வீரரைப் பார்த்து கோபத்தில் கத்திய ரோகித் சர்மாவின் வீடியோ
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் வாஷிங்டன் சுந்தர் கேட்ச் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாததால்,கேப்டன் ரோகித் சர்மா கோபப்பட்ட நிகழ்வு நடந்தது.
மிரட்டிய மெஹிதி
ஹசன் டாக்கா ஒருநாள் போட்டியில், இந்திய அணி நிர்ணயித்த 187 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி வங்கதேச அணி ஆடியது.
வங்கதேச அணி 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில், மெஹிதி ஹசன் வெற்றிக்காக தனி ஆளாக போராடிக் கொண்டிருந்தார். எனினும் அவர் சிக்ஸர், பவுண்டரிகளை விளாசவும் தவறவில்லை.
கேட்சை கண்டுகொள்ளாமல் நின்ற சுந்தர்
போட்டியின் 43வது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார். அந்த ஓவரின் 4வது பந்தை மெஹிதி ஹசன் அடித்தபோது உயர பறந்தது. வாஷிங்டன் சுந்தருக்கு கேட்ச் வாய்ப்பு இருந்த போதும் அவர் வேகமாக ஓடி வராமல் ஒரே இடத்தில் நின்றார்.
coolest captain of all time rohit sharma abused his young teammate just now but but Kohli is this and that and rohit sharma is cool and calm pic.twitter.com/Dh18AZJLoO
— ` (@murdockflix) December 4, 2022
அவருக்கு மின்விளக்கு ஒளி கண்ணை கூசியது போல் தெரிந்தது. எளிய கேட்ச் வாய்ப்பை தவறவிட்டதால் கேப்டன் ரோகித் சர்மா கோபத்தில் சுந்தரைப் பார்த்து கத்தினார்.
அவர் மோசமான வார்த்தை பயன்படுத்தியதாக வீடியோவில் தெரிந்தது.
அதன் பிறகு மெஹிதி ஹசன் மூன்று பவுண்டரிகளை விளாசியதுடன் தனது அணியை வெற்றி பெற வைத்தார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.