இங்கிலாந்தை ஒற்றை ஆளாக கதறவிட்ட ரோகித் சர்மா! சிக்சர் மழை பொழிந்த வீடியோ
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 5 சிக்சர்களை பறக்கவிட்ட நிலையில் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இப்போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 25.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு சுருண்ட நிலையில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 18.4 ஓவர்களில் 114 ரன்களை எடுத்து வெற்றி வாகை சூடியது.
Yesterday Match Fav pull Shot ~ 1 & 5 ??#RohitSharma pic.twitter.com/b0yyzZY3YD
— mr. MR_? (@Itz_MR_61) July 13, 2022
இப்போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ருத்ர தாண்டவம் ஆடினார். அதன்படி 5 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் என 76 ரன்களை குவித்தார். இந்த 5 சிக்சர்கள் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 250 சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
உலகளவில் இந்த மைல்கல்லை தொட்ட நான்காவது வீரர் ரோகித் சர்மா ஆவார்.
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடி 351 சிக்சர்களும், வெஸ்ட் இண்டீஸ் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 331 சிக்சர்களும், இலங்கை ஜாம்பவான் 270 சிக்சர்களும் அடித்து இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.