வலியை மறைத்து சதம் அடித்த ரோகித்! வெளியான புகைப்படம்: கடும் வேதனையில் ரசிகர்கள்
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், சதம் அடித்த ரோகித் தொடை முழுவதும் சிவந்து போய் படுத்து கிடக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடி வரும் இந்திய அணி, இன்றைய நான்காம் நாள் ஆட்ட நேர மதிய இடைவெளியில் 6 விக்கெட் இழப்பிற்கு 329 ஓட்டங்கள் எடுத்து 230 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது.
இந்நிலையில், இந்த இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித் சர்மா சதம் அடித்து 127 ஓட்டங்களில் பவுலியன் திரும்பினார்.
வெளிநாட்டு மண்ணில் ரோகித் டெஸ்ட் போட்டியில் அடித்த முதல் சதம் இது என்பதால், அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதையடுத்து, சதம் அடித்த ரோகித்சர்மா தொடை முழுவதும் சிவந்து போய் காயங்களுடன் படுத்து கிடக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதைக் கண்ட ரோகித் ரசிகர்கள் சதத்திற்கு பின் ஒளிந்திருக்கும் வலி என்று குறிப்பிட்டு வருகின்றனர்.