இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா மனைவிக்கு அடித்த அதிர்ஷ்டம்!
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மாவும், அவர் மனைவி ரித்திகாவும் மேக்ஸ் லைஃப் இன்சுரன்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கணவருடன் சேர்ந்து முதல்முறையாக திரையில் தோன்றும் அதிர்ஷ்டத்தை அவர் பெற்றுள்ளார்.
இதற்காக இரண்டு ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் தனது கணவர் ரோகித் சர்மாவுடன் முதல்முறையாக திரையில் ரித்தியாக அறிமுகமாகும் அதிர்ஷ்டம் அவருக்கு அமைந்துள்ளது.
மேலும் மிகப்பெரிய இன்சுரன்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர்களாக நியமிக்கப்பட்டதன் மூலம் தம்பதிக்கு பெரும் தொகை நிறுவனத்தால் வழங்கப்படுவதாக தெரிகிறது.
timesnownews
இது குறித்து ரித்திகா கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் விரிவான நிதிப் பாதுகாப்பு இன்றியமையாதது.
குடும்பத்தின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்கும், ரோஹித்துடன் இணைந்து மேக்ஸ் லைஃப் உடனான இந்த வாய்ப்பை நான் எதிர்நோக்குகிறேன், மேலும் நிதி தயார்நிலை மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் கூறும் வாய்ப்பு அமைந்துள்ளது என கூறியுள்ளார்.