எளிய கேட்சை தவறவிட்ட வீரர்! கோபத்தில் கத்திய ரோகித் சர்மா.. வைரலாகும் வீடியோ
ஆசிப் அலியின் கேட்சை அர்ஷ்தீப் சிங் தவறவிட்டதால் கோபத்தில் கத்திய ரோகித் சர்மா
ஒரு கேட்சை தவறவிட்டதால் கண்டனத்திற்குள்ளான இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்
பாகிஸ்தான் வீரரின் கேட்சை அர்ஷ்தீப் சிங் தவறவிட்டபோது, இந்திய கேப்டன் ரோகித் சர்மா கோபத்தில் கத்திய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் அர்ஷ்தீப் சிங் எளிதான கேட்சை தவறவிட்டது பெரும் விவாதமாக மாறியுள்ளது.
ஆசிப் அலி அடித்த பந்தை பீல்டிங் செய்துகொண்டிருந்த அர்ஷ்தீப் சிங் பிடிக்க தவறிவிட்டார். போட்டியின் முக்கியமான கட்டத்தில் வீரர் ஒருவர் கேட்சை தவறவிட்டதால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கோபத்தில் கத்தினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#ArshdeepSingh Trolled Heavily On Social Media For Dropping Asif Ali's Catch In The Super-4 Match Of #AsiaCup. pic.twitter.com/AGRIoLTWYt
— The Ink And Paper (@theinkandpaper) September 4, 2022
கேட்சை தவறவிட்டதால் சமூக வலைதளத்தில் அர்ஷ்தீப் சிங் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.