திருமணம் எப்போது? பொதுவெளியில் கேட்ட ரோகித் சர்மா.. வெட்கப்பட்ட பாபர் அசாம் வீடியோ
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மாவும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும் உரையாடிய சுவாரசிய வீடியோ வைரலாகியுள்ளது.
ஆசிய கோப்பை தொடரில் இன்று இந்தியா - பாகிஸ்தான் மோதவுள்ள நிலையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும் கலகலப்பான உரையாடலில் ஈடுபட்டு உள்ளனர்.
பயிற்சிக்கு இடையே ரோகித் சர்மாவும், பாபர் அசாமும் சந்தித்து உள்ளனர். இந்த சந்திப்பின்போது, எப்போது திருமணம் என பாபர் அசாமிடம், ரோகித் சர்மா கேட்க, இப்போது திருமணம் செய்ய மாட்டேன் என வெட்கத்துடன் பாபர் அசாம் பதிலளித்து உள்ளார்.
இந்தக் காட்சிகளை இருநாட்டு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைரலாகியுள்ளனர்.
The Gupshap Of Captains Babar Azam x Rohit Sharma ? Asia Cup 2022 getting ?#BabarAzam #RohitSharma #ViratKohli? #PakVsInd #AsiaCup2022 pic.twitter.com/R6oiXkeGYk
— Dr. Amna Jamal (@amnakegossips) August 27, 2022