இனி சிக்ஸர் மன்னன் ரோகித் தான்! நொறுங்கிய ஜாம்பவான்களின் சாதனை
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா அதிக சிக்சர் அடித்த வீரர் எனும் பாரிய சாதனையை படைத்தார்.
ருத்ர தாண்டவம் ஆடிய ரோகித்
டெல்லியில் நேற்று நடந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானை வீழ்த்தியது.
இந்திய கேப்டன் ரோகித் சர்மா 84 பந்துகளில் 131 ஓட்டங்கள் விளாசினார். இதில் 5 சிக்சர், 16 பவுண்டரிகள் அடங்கும்.
ICC Cricket World Cup
இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்தார்.
சிக்ஸர் சாதனை
ரோகித் மொத்தமாக 556 சிக்சர்கள் அடித்துள்ளார். கிறிஸ் கெய்லின் (553) சாதனையை முறியடித்த ரோகித், ஒருநாள் போட்டிகளில் 297 சிக்ஸர்களையும், டி20யில் 182 சிக்சர்களையும், டெஸ்டில் 77 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார்.
இந்தப் பட்டியலில் ஷாகித் அப்ரிடி (476) , பிரெண்டன் மெக்கல்லம் (398), மார்டின் கப்தில் (383), எம்.எஸ். தோனி (359) , சனத் ஜெயசூரியா (352) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |