என்னவொரு பயணம், அனைவருக்கும் நன்றி! ரோகித் சர்மாவின் உருக்கமான கடிதம்
இந்திய அணியில் களமிறங்கி 15 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ரோகித் சர்மா உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2007ஆம் ஆண்டு இதே திகதியில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கினார்.
எனினும், 2013ஆம் ஆண்டு தொடக்க வீரராக அவர் களமிறங்கிய பின்னர் தான் தவிர்க்க முடியாத வீரராக மாறினார். தற்போது அவரது தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்நிலையில், ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து 15 ஆண்டுகள் ஆனதற்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. என்னவொரு பயணம் இது, நிச்சயமாக என் வாழ்நாள் முழுவதும் இதனை நேசிப்பேன்.
𝟭𝟱 𝘆𝗲𝗮𝗿𝘀 in my favourite jersey 👕 pic.twitter.com/ctT3ZJzbPc
— Rohit Sharma (@ImRo45) June 23, 2022
இந்த பயணத்தில் என்னுடன் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் இன்று ஒரு விளையாட்டு வீரராக இருப்பதற்கு உதவிய அனைவருக்கும் சிறப்பான நன்றிகள். கிரிக்கெட்டை நேசிக்கும் அனைவருக்கும், ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், உங்கள் அன்பும், ஆதரவும் தான் எனக்கு பல சவால்களை சமாளிக்க உதவியது' என தெரிவித்துள்ளார்.
Photo Credit: BCCI Photo

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.