இவர் தான் என்னுடன் ஓபனிங் இறங்குவார்! இளம் வீரரின் பெயரை வெளிப்படுத்திய ரோகித் சர்மா
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தன்னுடன் களமிறங்கும் ஓபனிங் பேட்ஸ்மேனின் பெயரை இந்திய அணி கேப்டன் ரோகித் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போடடிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நாளை பிப்ரவரி 6ம் திகதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
தவான் உட்பட 4 இந்திய வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், யார் ஓபனிங் இறங்குவார் என்ற சந்தேகம் ரசிகர்களிடையே நிலவி வருகிறது.
அதேசமயம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள மயங்க அகர்வால், தற்போது 3 நாட்கள் தனிமைப்படுத்தலில் உள்ளார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய ஒரு நாள் அணி கேப்டன் ரோகித் சர்மா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தன்னுடன், இஷான் கிஷான் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என அறிவித்துள்ளார்.
அணியில் சேர்க்கப்பட்டுள்ள மயங்க் தனிமைப்படுத்தலில் இருக்கிறார். அவர் தாமதமாக வந்துள்ளார் மற்றும் எங்களுக்கென சில விதிகள் இருக்கிறது.
வீரர்கள் யாராவது பயணித்து வந்தார்கள் என்றால், அவர்களை நாங்கள் 3 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்.
தற்போது வரை மயங்க் அவரின் தனிமைப்படுத்தலை முடிக்கவில்லை, எனவே இஷான் கிஷான் ஓபனிங் இறங்குவார் என ரோகித் தெரிவித்துள்ளார்.