50வது சதம் விளாசிய ரோஹித் சர்மா - அவுஸ்திரேலியா மண்ணில் யாரும் செய்யாத சாதனை
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் சதமடித்ததன் மூலம் ரோஹித் சர்மா 2 புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
ரோஹித் சர்மா சதம்
சிட்னியில் நடைபெற்ற இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 125 பந்துகளில், 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 121 ஓட்டங்கள் குவித்தார்.
இந்த சதத்தின் மூலம் ரோஹித் சர்மா 2 சாதனைகளை படைத்தார்.
2 சாதனைகள்
இது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மாவின் 33வது சதம் ஆகும். மேலும், அவருடைய 50வது சர்வதேச சதமாகும்.
இது அவுஸ்திரேலியாவிற்கு எதிரான அவரது 9வது ODI சதம் ஆகும். இதன் மூலம், அவுஸ்திரேலியாவிற்கு எதிராக அதிக ODI சதங்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன்செய்துள்ளார்.

சச்சின் 70 போட்டிகளில் செய்த சாதனையை ரோஹித் சர்மா 49 போட்டிகளில் செய்துள்ளார்.
மேலும், அவுஸ்திரேலிய மண்ணில் அதிக ODI சதங்கள் (6) அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
5 சதங்களுடன் விராட் கோலி மற்றும் சங்ககரா 2வது இடத்தில் உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |