பால் பாக்கெட் விற்பனை செய்த ரோஹித் சர்மா! வெளியான சுவாரசிய தகவல்கள்
முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராக்யன் ஓஜா(Pragyan Ojha) தனது நண்பர் ரோகித் சர்மா கிரிக்கெட் கிட் வாங்குவதற்காக என்னவெல்லாம் செய்தார் என்ற சுவாரஸ்யமான தகவலை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
ரோகித் சர்மாவுடனான நட்பு
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராக்யன் ஓஜா, ரோகித் சர்மாவுடனான நட்பை பற்றியும், சிறு வயதில் அவர்களுக்குள் நடந்த சில சுவாரஸ்யமான விடயங்களையும் ஜியோ சினிமாவிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஓஜா மற்றும் ரோஹித் சர்மா(rohit sharma) இருவரும் 15 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் போதிலிருந்து ஒருவரையொருவர் நன்கு அறிந்திருந்தனர்.
@crictracker
மேலும் இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL 2008) தொடக்கப் பதிப்பில் இந்தியா, டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடினர்.
பால் பாக்கெட் போட்ட ரோகித்
”15 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய முகாமில் தான் ரோகித்தை முதலில் சந்தித்தேன். அவர் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் கிரிக்கெட் கிட் வாங்க பால் பாக்கெட் விற்பனை செய்ததாக எங்களுக்குள் நடந்த விவாதங்களின் போது உணர்ச்சி வசப்பட்டு தெரிவித்திருக்கிறார்.”
@cricbuzz
”தேசிய முகாமில் ரோகித் மிகவும் சிறப்பான வீரர் என்று எல்லோரும் சொன்னார்கள். அங்கு அவருக்கு எதிராக விளையாடி விக்கெட்டை வீழ்த்தினேன். அவர் அதிகமாக பேசியதில்லை. ஆனால் விளையாடும்போது ஆக்ரோஷமாக இருப்பார்.”
"ரஞ்சி டிராபியில் மும்பைக்காக விளையாடும் வாய்ப்பு ரோஹித் பெறும் வரை நாங்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்திருந்தோம். 19 வயதினருக்கு உட்பட்டவர்களான கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்காக நாங்கள் விளையாடும் போது நிறைய பதற்றத்தில் இருந்தோம்.
அப்போதெல்லாம் ரோகித் பதற்றத்தைக் குறைக்கும் வகையில், யார் போலாவது பேசிக்காட்டி மிமிக்ரி செய்வார் உடனே அணி வீரர்கள் எல்லோரும் சிரிப்போம்” என பேட்டியில் ஓஜா ஜியோ சினிமாவிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.