ரோகித்தை தூக்க சொல்றேங்களா? பத்திரிக்கையாளர் கேள்வியால கோபமடைந்த கோலி: வெளியான வீடியோ
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சொதப்பிய ரோகித் பற்றி பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கோலி சற்று கோபமடைந்து அதன் பின் புனனகைத்தார்.
இன்று நடைபெற்ற உலக்கோப்பை டி20 தொடருக்கான பாகிஸ்தான் ஆட்டத்தில், இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பதிவு செய்தது. குறிப்பாக இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித்சர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இந்திய அணியின் துவக்கம் சரியில்லாத காரணத்தினாலே இந்திய அணியால் ஒரு வலுவான இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை என்று ரசிகர்கள் இப்போதே கூற ஆரம்பித்துவிட்டனர்.
Droping rohit for ishan..??
— Rahul tanwar (@rahultanwar_09) October 24, 2021
Look at Virat Reply. ? #INDvPAK #Kohli #T20WorldCup #TeamIndia #Cricket pic.twitter.com/fwJtvxOpYc
இந்நிலையில், போட்டி முடிந்த பின்பு, கோலி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர், கோலியிடம் இந்த போட்டியில் ஒருவேளை ரோகித்திற்கு பதிலாக இஷான் கிஷனை இறக்கியிருக்கலாம் என்று தோன்றுகிறதா? என்று கேள்வி எழுப்ப, உடனே கோஹ்லி முதலில் ஒரு வித கோபத்தை வெளிப்படுத்தி, என்னது ரோகித்தையா, அவரை நிறுத்த சொல்கிறீர்களா? அவர் முன்பு ஆடிய போட்டியை பாருங்கள் என்று அதன் பின் சிரித்து கொண்டே பதில் அளித்தார்.