மைதானத்தின் புல்லை தின்ற ரோஹித் ஷர்மா! வைரல் வீடியோவின் காரணம் என்ன?
இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா மைதானத்தின் புல்லினை தின்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கிண்ணம்
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பின்னர் டி20 உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது.
வெற்றி பெற்ற பின் இந்திய முகாமின் மனநிலை உணர்ச்சிகரமாக மாறியது. Marqueeவில் இந்திய வீரர்கள் வெற்றியை கொண்டாடினர்.
குறிப்பாக அணித்தலைவர் ரோஹித் ஷர்மா உணர்ச்சிவசப்பட்டு கைதட்டி தரையில் படுத்துக் கொண்டார்.
வைரல் வீடியோ
ஆனால், அவர் பார்படாஸ் ஆடுகளத்தில் புல் சாப்பிடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ரோஹித் ஷர்மா இதுகுறித்து எதுவும் கூறவில்லை.
எனினும், உலகக்கிண்ணத்தை வென்ற ஆடுகளத்தின் ஒரு பகுதியை தன்னுடன் எடுத்துச் செல்ல ரோஹித்தின் ஒரு முயற்சியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏனெனில், செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் இதேபோல் முன்பு, விம்பிள்டன் பட்டத்தை வென்ற பிறகு Courtயில் இருந்து புல் சாப்பிட்டு கொண்டாடி இருக்கிறார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |