தேசிய கீதம் பாடும்போது ரோகித் சர்மா செய்த செயல்! இணையத்தில் வைரலாகும் வீடியோ
மெல்போர்னில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டம் செய்து வருகிறது
தேசிய கீதம் ஒலிக்கும் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உணர்ச்சிவசப்பட்ட வீடியோ வைரல்
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்பு தேசிய கீதம் ஒலிக்கும்போது ரோகித் சர்மா செய்த செயல் வைரலாகியுள்ளது.
உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மெல்போர்னில் இந்தப் போட்டி தொடங்கி நடந்து வருகிறது.
போட்டி தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கீதத்தை பாடி முடிக்கும்போது தனது முகத்தை ஒரு மாதிரி சுழித்தார்.
We all know that feeling! ???? #OneFamily #INDvPAK #T20WorldCuppic.twitter.com/rO101nw9aR
— Mumbai Indians (@mipaltan) October 23, 2022
உலகக்கோப்பையின் முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வதால் இருக்கும் பதற்றத்தை அவர் முகத்தில் வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.