சச்சினின் சாதனையை இலங்கையில் முறியடித்த ரோஹித் சர்மா!
இந்தியாவின் ஆசிய கோப்பை ஆட்டத்தின் போது 5000 ஒருநாள் பார்ட்னர்ஷிப் ஓட்டங்களை குவித்த எட்டாவது ஜோடியாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடம்பிடித்துள்ளனர்.
ரோஹித் சர்மா
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவிரைவாக 10,000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரராக ரோஹித் சர்மா பதிவாகியுள்ளார்.
இந்த பட்டியலில் இந்த அணியின் சக வீரர் விராட் கோலி முதல் இடத்தில் இருக்கின்றார்.
இந்நிலையில் இலங்கை அணி ஆசிய கிரிக்கெட் தொடரின் super 4 சுற்றில் ரோஹித் சர்மா இந்த மைல்களை எட்டியுள்ளார். அத்துடன் 13,000 ஓட்டத்தை கடந்த 3வது இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் அவர் பதிவாகியுள்ளார்.
இதற்கு முன்னர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சச்சின் டென்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோர் இதுவரை 13,000 ஓட்டங்களை பெற்ற வீரர்களாக காணப்படுகின்றனர்.
10000 ODI ஓட்டங்களை மிக வேகமாக எடுத்தவர்கள்
விராட் கோலி - 205 இன்னிங்ஸ்
ரோஹித் சர்மா - 241 இன்னிங்ஸ்
சச்சின் டெண்டுல்கர் - 259 இன்னிங்ஸ்
சவுரவ் கங்குலி - 263 இன்னிங்ஸ்
ரிக்கி பாண்டிங் - 266 இன்னிங்ஸ்
A TENure of sheer cricketing brilliance! ?#Whistle4Blue?? #AsiaCup #INDvSL pic.twitter.com/VaK5qr1R9t
— Chennai Super Kings (@ChennaiIPL) September 12, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |