அவர் எங்களுக்கு மிகப்பெரிய ரோல் மொடல்..பதவி விலகுவது கடினமாக உள்ளது - ரோஹித் ஷர்மா உருக்கம்
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக தொடர வற்புறுத்த முயற்சித்ததாக தெரிவித்துள்ளார்.
ரோஹித் ஷர்மா
இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் சூன் மாத இறுதியில் முடிவடைகிறது.
அத்துடன் பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் திட்டம் இல்லை என அவர் திங்கட்கிழமை அன்று கூறினார்.
இந்த நிலையில் இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா செய்தியாளர்களை சந்தித்தபோது டிராவிட் குறித்து உருக்கமாக பேசினார்.
ரோஹித் ஷர்மா உருக்கம்
அவர் கூறுகையில், ''அவர் (டிராவிட்) எனது முதல் அணித்தலைவர், பின்னர் நான் அணிக்கு வரும்போது அவர் விளையாடுவதை நான் பார்த்தேன். ஒரு வீரராக அவர் தனிப்பட்ட முறையில் என்ன சாதித்தார் மற்றும் பல ஆண்டுகளாக அவர் அணிக்காக என்ன செய்தார் என்பது எங்களுக்கு தெரியும்.
நான் அவரை பயிற்சியாளராக தொடர வைக்க முயற்சித்தேன். ஆனால் வெளிப்படையாக அவர் கவனிக்க வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. நான் தனிப்பட்ட முறையில் அவருடன் என் நேரத்தை அனுபவித்து மகிழ்ந்தேன். மற்ற தோழர்களும் இதையே சொல்வார்கள் என்று நான் நம்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
51 வயதாகும் டிராவிட், 2021யில் டி20 உலகக்கிண்ணத்தைத் தொடர்ந்து ரவி சாஸ்திரிக்கு பதிலாக தேசிய அணிக்கு பயிற்சியாளர் ஆனார். தற்போது டிராவிட்டுக்கு பதிலாக கவுதம் காம்பீர் பயிற்சியாளர் பதவிக்கு போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |