Champions Trophy final: வாணவேடிக்கை காட்டி அரைசதம் அடித்த ரோஹித் ஷர்மா (வீடியோ)
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து 252 ஓட்டங்கள் வெற்றி இலக்காக இந்தியாவுக்கு நிர்ணயித்தது.
துபாயில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடி வருகின்றன.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 251 ஓட்டங்கள் எடுத்தது. நிதானமாக ஆடிய டேர்ல் மிட்செல் (Daryl Mitchell) 63 (101) ஓட்டங்கள் எடுத்தார்.
HIGH & HANDSOME! 🙌#RohitSharma steps out & welcomes Nathan Smith with a 93m six! 🤯#ChampionsTrophyOnJioStar FINAL 👉 #INDvNZ | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 2 & Sports18-1!
— Star Sports (@StarSportsIndia) March 9, 2025
📺📱 Star watching FREE on JioHotstar: https://t.co/Bp0noOiMnu pic.twitter.com/6OmjhbNdOx
அதிரடியில் மிரட்டிய மைக்கேல் பிரேஸ்வெல் 40 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் விளாசினார். வருண் சக்கரவர்த்தி, குல்தீப் தலா 2 விக்கெட்டுகளும், ஷமி மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) ருத்ர தாண்டவம் ஆடினார். சிக்ஸர், பவுண்டரி என பறக்கவிட்ட அவர் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |