சிக்ஸர் பறக்கவிட்டு கோலியின் சாதனையை தவிடுபொடியாக்கிய ரோகித்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அதிக சிக்ஸர்களை டி20 கிரிக்கெட்டில் அடித்த கோலியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.
செயின்ட் கிட்ஸில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் மேயர்ஸின் அதிரடியான ஆட்டத்தினால் 5 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்கள் குவித்தது.
மேயர்ஸ் 50 பந்துகளில் 73 ஓட்டங்களும், ரோவ்மன் பவுல் 14 பந்துகளில் 23 ஓட்டங்களும் விளாசினர். இந்திய அணியின் தரப்பில் புவனேஷ்வர்குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
PC: @ICC | Twitter
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை அடித்து துவைத்த சூர்யகுமார் யாதவ் 44 பந்துகளில் 76 ஓட்டங்கள் குவித்தார். இதில் 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும்.
Social Media
இறுதிவரை களத்தில் நின்ற பண்ட் 26 பந்துகளில் 33 ஓட்டங்கள் எடுத்தார். முன்னதாக, கேப்டன் ரோகித் சர்மா 5 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து 11 ஓட்டங்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். அவர் அடித்த சிக்ஸர் மூலம் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
sportskeeda
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய கேப்டன் என்ற கோலியின் சாதனையை ரோகித் தகர்த்தார். கோலி 50 ஆட்டங்களில் 59 சிக்ஸர்கள் அடித்துள்ள நிலையில், ரோகித் 34 இன்னிங்ஸ்களில் 60 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
icc-cricket
இந்தப் பட்டியலில் 34 சிக்ஸர்கள் அடித்து தோனி மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதன் மூலம், 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
கடந்த இரண்டு போட்டிகளில் தடுமாறிய சூர்யகுமார், அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
PC: AFP