கோலியை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த ரோஹித் ஷர்மா!
டி20யில் 300 பவுண்டரிகளை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சனிக்கிழமையன்று டி20 போட்டிகளில் 300 பவுண்டரிகளை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.\
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ரோஹித் இந்த சாதனையை நிகழ்த்தினார். அப்போட்டியில் அவர் 20 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்தார் மற்றும் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் தனது ஒட்டுமொத்த பவுண்டரிகளின் எண்ணிக்கையை 301-ஆக உயர்த்தினார்.
[35DW89 ]
இந்த சாதனையுடன், மொத்தம் 298 பவுண்டரிகளுடன் இந்திய வீரர் விராட் கோலியை பின்னுக்குத் (மூன்றாம் இடம்) தள்ளி, ரோஹித் இரண்டாவது இடத்திற்கு வந்தார். இந்தப் பட்டியலில் அயர்லாந்து அணியின் வீரர் பால் ஸ்டிர்லிங் மொத்தம் 325 பவுண்டரிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
பர்மிங்காமில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் ரிச்சர்ட் க்ளீசன் மற்றும் கிறிஸ் ஜோர்டான் தலைமையிலான இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்டர்களை ஆதிக்கம் செலுத்தினர், கேப்டன் ரோஹித் சர்மா (31), ரவீந்திர ஜடேஜா (31) மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் (46*) முயற்சியால் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணிக்கு பேட்டிங்கில் மிகவும் ஏமாற்றமளிக்கும் நாளாக அமைந்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முன்னால் அதிக தாக்குதலுக்கு ஆளாக இங்கிலாந்து அணி 121 ஓட்டங்களுக்கு சுருண்டது.
மொயீன் அலி (35), டேவிட் வில்லி (33*) மட்டுமே அவர்களது பெயர்களுக்கு அடுத்தபடியாக போடக்கூடிய அளவிற்கு நல்ல ஸ்கோரை எடுத்திருந்தனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டிங்ஹாமில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன.