இலங்கை அணியுடனான போட்டியில் ரோகித் சர்மா செய்த செயல் - வைரலாகும் வீடியோ
இலங்கை அணிக்கெதிரான 2வது டி20 போட்டியில் ரோகித் சர்மா செய்த செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 ஆட்டத்தில் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற, நேற்று இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது.
இதனிடையே இப்போட்டியின் போது இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஃபீல்டிங் செய்வதற்கு முன் காபி போன்று ஏதோ ஒரு பானத்தை பருகிக் கொண்டிருந்தார். அப்போது மைதானத்தில் இருந்த ஒரு கேமரா அவரை நோக்கி திரும்பியது.
இதனை சரியாக கவனித்த ரோகித் சர்மா உங்களுக்கும் வேண்டுமா? ..இந்தா வாங்கிக்க என்பது போல செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Just Rohit Sharma things ??#RohitSharma #INDvsSL pic.twitter.com/ytv5nwwYyf
— CRICKET VIDEOS ? (@AbdullahNeaz) February 26, 2022