148 கிமீ வேகத்தில் பலமாக தாக்கிய பந்து.. காயமடைந்து வலியால் துடித்து போன ரோகித் சர்மா! வெளியான வீடியோ
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் துடுப்பாடும் போது பந்து தாக்கியத்தில் இந்திய வீரர் ரோகித் சர்மா காயமடைந்தார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று மார்ச் 23 திகதி புனேயில் தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது, அதன் படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
முதல் இன்னிங்ஸின் நான்காவது ஓவரில் இங்கிலாந்து வீரர் வுட்ஸ் 148 கிமீ வேகத்தில் வீசிய பந்து துடுப்பாடிய இந்திய வீரர் ரோகித் சர்மாவின் முழங்கையில் தாக்கியது..
Mark Wood Could Be In Trouble, Rohit Sharma May Come For You!#INDvENG pic.twitter.com/R9i2VAsIna
— @TimeTravellerJofraArcher (@JofraArcher8) March 23, 2021
வலியால் துடித்த ரோகித் சர்மாவுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
எனினும், பவுலியனுக்கு திரும்பாமல் தொடர்ந்து துடுப்பெடுத்தாடி ரோகித் 28 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
காயத்துடன் தொடர்ந்து விளையாடிய ரோகித் சர்மாவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.