கேப்டனாக சதம் விளாசிய ரோகித் சர்மா
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாசியுள்ளார்.
ராஜ்கோட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மார்க் வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சுப்மன் கில் டக்அவுட் ஆக, ரஜத் பட்டிதாரை 5 ஓட்டங்களில் ஹார்ட்லே வெளியேற்றினார். ஆனால் கேப்டன் ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
@X(BCCI)
அவருடன் ரவீந்திர ஜடேஜா பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்த கூட்டணியின் மூலம் இந்திய அணி 200 ஓட்டங்களை கடந்துள்ளது.
தனது இன்னிங்சில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 11வது சதத்தினை பதிவு செய்தார். அதேபோல் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய ஜடேஜா 21வது அரைசதம் அடித்தார்.
?! ? ?
— BCCI (@BCCI) February 15, 2024
Captain leading from the front & how! ? ?
Well played, Rohit Sharma ? ?
Follow the match ▶️ https://t.co/FM0hVG5pje#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/BAfUCluE2H
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |