வாணவேடிக்கை காட்டிய ரோஹித்! 19 பந்தில் அரைசதம் விளாசல்..அலறவிட்ட வீடியோ
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக்கிண்ண போட்டியில், இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா அதிவேக அரைசதம் விளாசினார்.
செயிண்ட் லூசியாவில் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தெரிவு செய்ய, இந்திய அணி களமிறங்கியது.
VINTAGE ROHIT SHARMA. ?
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 24, 2024
- Punished Starc for 29 runs. ? pic.twitter.com/69pTu9G6Zo
விராட் கோஹ்லி ரன் எடுக்காமல் ஹேசல்வுட் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால், அணித்தலைவர் ரோஹித் ஷர்மா சிக்ஸர் மழை பொழிந்தார்.
மிட்செல் ஸ்டார்க்கின் ஒரே ஓவரில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 28 ஓட்டங்களை விளாசி ரோஹித் அதகளம் செய்தார்.
கம்மின்ஸ் ஓவரில் சிக்ஸரை பறக்கவிட்ட அவர், 19 பந்தில் அரைசதம் அடித்தார். நடப்பு தொடரில் அடிக்கப்பட்ட அதிவேக அரைசதம் இதுவாகும்.
FIFTY ? for Captain Rohit Sharma in just 19 deliveries‼
— BCCI (@BCCI) June 24, 2024
He is leading from the front for #TeamIndia ?
Follow The Match ▶️ https://t.co/L78hMho6Te#T20WorldCup | #AUSvIND | @ImRo45 pic.twitter.com/rfrMmFMsVv
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |