மீண்டும் டி20க்கு வந்து சாதனை சதம் விளாசிய ரோஹித்
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ரோஹித் படைத்த சாதனை
பெங்களூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இந்தியா ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 121 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம், சர்வதேச இந்தியா கிரிக்கெட் டி20 போட்டியில் ரோஹித் சர்மா டி20களில் 5 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார்.
BCCI
முன்னதாக கிளென் மேக்ஸ்வெல், சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோஹித் ஆகியோர் இந்த ஆட்டத்திற்கு முன்பு நான்கு சதங்களை அடித்திருந்தனர்.
இந்த நிலையில், ரோஹித் சர்மா 5வது சதம் விளாசியதன் மூலம் இவர்கள் இருவரையும் முந்தி முதலிடத்தை பிடித்துள்ளார்.
T20-யில் அதிக சதம் விளாசிய வீரர்கள்:
- ரோஹித் சர்மா (5)
- சூர்யகுமார் யாதவ் (4)
- கிளென் மேக்ஸ்வெல் (4)
- பாபர் அசாம் (3)
- சபாவூன் டேவிசி (3)
- கொலின் மன்ரோ (3)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |