அர்ஜுன் டெண்டுல்கருடன் விளையாடுவது சூப்பரா இருக்கு.. - ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி
அர்ஜுன் டெண்டுல்கருடன் விளையாடுவது உற்சாகமாக உள்ளதாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர்
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், கிரிக்கெட் உலகில் ஜாம்பவனாக வலம் வந்தார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் அஞ்சலி மேத்தா என்ற டாக்டரை திருமணம் செய்து கொண்டார் சச்சின். இத்தம்பதிக்கு சாரா என்ற மகளும், அர்ஜுன் என்ற மகனும் உள்ளனர்.
சாதனைப் படைத்த அர்ஜூன் டெண்டுல்கர்
சமீபத்தில் ரஞ்சித் தொடரின் அறிமுக போட்டியிலேயே சதமடித்து அர்ஜூன் டெண்டுல்கர் சாதனைப் படைத்தார். கோவா அணிக்காக விளையாடிய அர்ஜூன், 112* ரன்களுடன் விளையாடினார்.
புகழாரம் சூட்டிய ரோஹித் சர்மா
அர்ஜுன் டெண்டுல்கருடன் விளையாடுவது உற்சாகமாக உள்ளது என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரோஹித் சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அர்ஜூன் டெண்டுல்கர் 3 ஆண்டுகளாக மும்பை அணியில் இருக்கிறார். அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்துள்ளார். அதை உறுதியுடன் செயல்படுத்தி வருகிறார். புதிய பந்தில் பந்துவீசும்போது ஸ்விங் செய்ய முயற்சி மேற்கொள்கிறார். இறுதி ஓவர்களில் யார்க்கர் பந்துக்களை வீசுகிறார். அவருடன் விளையாடுவது மிகுந்த உற்சாகமாக உள்ளது என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.